உசிலம்பட்டி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் - பெண் விஏஓ கைது

உசிலம்பட்டி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-28 08:34 GMT

விஏஓ ரம்யா

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துபேயத்தேவர். இவருக்கு சொந்தமான 34 சென்ட் இடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் உள்ளது. இந்த இடத்தை இவருடைய மகன் காசி மாயன் பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.பதில் இல்லை.இந்நிலையில் கடந்த வாரம் நேரில் வந்தபோது போத்தம்பட்டி விஏஓ ரம்யா பட்டா மாறுதலுக்கு ரூ9ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத முத்துபேயத்தேவர் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சத்தியசீலன் அறிவுறுத்தலின்படி ரூ.9ஆயிரம் பணத்தில் ரசாயனம் கலந்த பவுடரை தடவி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விஏஓ ரம்யா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஆம்புஜெயராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் விஏஓ ரம்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News