’ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பயன்படுத்துவது குற்றம்’

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பயன்படுத்துவது குற்றம் என தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறை ஆணையர் பேசினார்.

Update: 2024-06-12 13:58 GMT

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பயன்படுத்துவது குற்றம் என தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறை ஆணையர் பேசினார்.


திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி செலுத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வருமான வரி மற்றும் இதர வரிகள் பொதுமக்கள் செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானவரி முறையாக தாக்கல் செய்யாதவர்களுக்கு 50 முதல் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒன்றுக்கும் அதிகமாக பான் கார்டு பயன்படுத்துவது தவறு. இது தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். ஆதார் கார்டு வங்கி கணக்கு ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் பான் கார்டு இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரி செலுத்த டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உச்சவரம்புக்கு மேல் வருமானம் பெறும் அனைவரும் அரசுக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டும்.

வருமான வரி செலுத்துவதால் நாடு வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருமான வரி செலுத்துதல் வருமான வரி செலுத்துவதில் ஏற்படும் சந்தேகங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News