பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

திண்டுக்கல் அருகே வடமதுரை பகுதியில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.;

Update: 2023-10-25 07:21 GMT

சாலையில் திரியும் பன்றிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம்,வடமதுரை பேரூராட்சியில் கலைமகள் பள்ளி ஆர் எஸ் ரோடு பகுதிகளில் மீண்டும் பன்றிகள் நடமாட்டம் ஆரம்பித்துவிட்டது.பன்றிகள் கும்பலாக வந்து வீட்டுக்குள் நுழைகின்றன. மழை பெய்து கொண்டு இருப்பதால் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. பன்றிகளால் பலவிதமான தொற்று நோய்கள் அந்த பகுதியில் பரவி வருகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகளை அப்புறப்படுத்தி சுகாதாரம் காக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதும் நடவடிக்கை இல்லை. பன்றிகள் வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகளை பேரூராட்சி எல்லைக்கு அப்பால் வளர்ப்பதற்கு அனுமதிக்கலாம். நகருக்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News