வடமதுரை : மக்கள் குறை தீர் சிறப்பு முகாம்
Update: 2023-12-20 09:43 GMT
குறைதீர் முகாம்
வடமதுரையில் பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஜோதிமணி எம்.பி., பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களின் மனுக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். பேரூராட்சி உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், செயல்அலுவலர் கல்பனாதேவி, அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன் பங்கேற்றனர்.