கங்கையம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

கணபதிபுரம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-06-03 09:48 GMT

 கணபதிபுரம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கணபதிபுரம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில் வைகாசி மாதத்திருவிழா நடைபெற்றது.

முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பக்தர்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். தொடர்ந்து பெண்கள் வேப்பிலை உடையணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல் படைத்து அம்மனை வழிபட்டனர். இதில் முருங்கை, சித்தூர், புள்ளலூர், பள்ளுர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News