மரகத தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக உற்சவம்
மதுராந்தகம் அருகே நடு பழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிடு சிறப்பு வழிபாடு நடந்தது.;
Update: 2024-05-22 13:10 GMT
மதுராந்தகம் அருகே நடு பழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிடு சிறப்பு வழிபாடு நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை கிராமத்தில் நடு பழனி ஸ்ரீ மரகதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.இக்கோவிலில் பால முருகனுக்கு காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை மூல மந்திர ஹோமம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து எட்டு மணிக்கு விசேஷ மகா அபிஷேகம் ஒன்பது மணிக்கு கலச அபிஷேகமும், அடுத்து பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும்,சந்தன அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.