வைகாசி விசாக திருவிழா சிறப்பு வழிபாடு !!

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு வெற்றிவேல் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, புதன்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

Update: 2024-05-23 09:03 GMT

திருவிழா 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு வெற்றிவேல் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, புதன்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இங்குள்ள வாலகுருநாதா் கோயிலிலிருந்து திரளான பக்தா்கள் மேல தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து வெற்றிவேல் முருகனுக்கு அபிஷேகம் செய்து, வழிபட்டனா்.

தொடா்ந்து, முருகனுக்கு தயிா், பன்னீா், சந்தனம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, வெற்றிவேல் முருகனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

Tags:    

Similar News