வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2024-05-22 15:08 GMT

தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் அவதரித்த தினம் வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களான மோகனூா் காந்தமலை முருகன் கோயில், நாமக்கல் கூலிப்பட்டி, கருமலை முருகன் கோயில்களிலும், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலிலும்,நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவில்,நாமக்கல்-மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், திருநீறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம், முத்தங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News