காதலர் தினம்: ஆன்லைன் மூலம் பூக்கள் விற்பனை தீவிரம்
தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு பல வண்ண ரோஜா பூக்கள் மற்றும் காரனேசன், ஜெரிபுரா உள்ளிட்ட பலவண்ண மலர்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன.
நாளை பிப்ரவரி 14 உலக முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு காதலர்கள் ஒருவருக்கொருவர் பூக்களை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவர் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஊட்டி ,பெங்களூர் ,கொடைக்கானல் ,
மைசூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து அதிக அளவில் சிகப்பு ,மஞ்சள் ,வெள்ளை, பேபிபின்ங் , பல வண்ணங்களில் ஆன ரோஜா பூக்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது இதேபோன்று பொக்கேகள் தயார் செய்ய பயன்படும் காரனேஷன் ,ஜெரிபுரா ,கிசாந்தம் உள்ளிட்ட பூக்களும் விற்பனைக்காக வந்துள்ளது வழக்கமாக 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ரோஜா பூ கட்டு தற்போது காதலர் தினம் காரணமாக விலை உயர்ந்து 400 ரூபாய்க்கும் ,20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு ரோஜா பூ ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் காதலர்கள் பொக்கேகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதால் மலர்களால் ஆன பொக்கேகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்தனர் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்