நரிப்பள்ளியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வேன் பிரச்சாரம்
அரூர் சட்டமன்ற தொகுதி நரிப்பள்ளியில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் வேன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-10 04:43 GMT
பிரச்சாரம்
தருமபுரி திமுக மேற்கு மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரூர் கிழக்கு ஒன்றியம் கோ. சந்திரமோகன் தலைமையில், இந்தியா கூட்டணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து, திமுக தலைமை கழக பேச்சாளர் லயோலா த. ராஜ சேகா், உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க நரிப்பள்ளி பகுதியில் நேற்று இரவு திறந்த வெளி வேன் பிரச்சாரம் செய்தார். இந்த நிகழ்வில் ஜெய்னுலாப்தீன் அவைத் தலைவர், ரஜினி மாறன்,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் அ.ஸ்ரீராம் ME..,சுபாஷ்,இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய மற்றும் கிளைக் கழகச் செயலாளர் BL2 BLC பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.