தேர்தலுக்காக நாடகம் போடுகிறது திமுக -வானதி சீனிவாசன்!

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மூத்த நிர்வாகிகள் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நிவாரண உதவிகளை செய்து வருவதாக கூறினார்

Update: 2023-12-21 01:16 GMT

வானதி சீனிவாசன் பேட்டி

கோவை: தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் ராஜா வீதியில் பாஜக கட்சியின் மண்டல அலுவலத்தை பாஜக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்த பின்னர் தானியங்கி மூலம் நாப்கின் வழங்கும் மிஷினை இயக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலுக்கு  கட்சியின் செயல்பாடுகள் முழுமையாக தொடங்கிவிட்டதாகவும்  ஒவ்வொரு பகுதிகளுக்கும் மண்டல அலுவலகம் துவங்கபட்டு மக்களின் கோரிக்கைகள்,தேவைகளை அறிந்து செயல்படவும் கட்சியினருக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார். தென் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டு உள்ள மக்களை பாதுகாக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவியுள்ளார் எனவும் மத்திய அரசு நிவாரண உதவிகள் செய்து வருவதாக கூறினார்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மூத்த நிர்வாகிகள் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நிவாரண உதவிகளை செய்து வருவதாக கூறியவர் கோவை மாவட்ட பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளது என்றார்.மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதியாக 1200 கோடி ரூபாய் வழங்கியதாகவும் அதை வங்கி மூலம் முறையாக விநியோகம் செய்யாமல் டோக்கன் வழங்கி ரேஷன் கடையில் பணம் பெற நீண்ட வரிசையில் காக்க வைத்து மக்களை அலைக்கழிக்கபடுவதாக குற்றம் சாட்டினார்.வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்திக்க செல்லாமல் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதாக கூறியவர்.

தேர்தலுக்காக  நாடகம் போடுவது திமுக தான் என்றார். கோவை மாநகராட்சிக்கு  200கோடி ரூபாய் நிதி அளிக்கபட்ட நிலையில் சாலைகள் சரிவர போடப்படவில்லை என்றவர் ஒப்பந்தகார்கள் மக்கள் வரி பணத்தை வீண் அளிப்பதாகவும் அவர்களுக்கு  மாநகராட்சி கமிஷனர் விளக்க நோட்டீஸ் அனுப்பவே  நேரம் சரியாக இருக்கிறத என்றார்.அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு குற்றம் சாட்டபடும் திமுக,எம்எல்ஏகள், அமைச்சர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதாகவும் செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்தும் துறையில்லாத அமைச்சர் என நம்மை ஏமாற்றினர் அதே போல தான் பொன்முடி அமைச்சர் பதவி மட்டும் அல்ல எம்எல்ஏ பதவிவும் பறி போகும் நிலை தான் என்றார்.

Tags:    

Similar News