பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து வானதி சீனிவாசன் பரப்புரை

திருச்செங்கோட்டில் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.

Update: 2024-04-11 16:27 GMT

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறி தைரியமாக வாக்கு கேட்கும் கூட்டணி பாஜக மட்டும் தான்... மற்ற கூட்டணிகளில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது தமிழகத்தில் எம்பி களே இல்லாவிட்டாலும் பிரதமரின் பல்வேறு நலத்திட்டங்களால் இன்று தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்.

தடி ஊன்றி நடக்கின்ற பாட்டிக்கு கூட இன்று வங்கி கணக்குகள் உள்ளன. அதில் நேரடியாக சிலிண்டர் மானியமும் விவசாய மானியமும் எந்த ஒரு இடைத்தரர்களும் இல்லாமல் வந்து சேர்கின்றது அதற்கு காரணம் பாரத பிரதமர் மோடி. மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமர் ஆகும் போது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் கே பி ராமலிங்கம் அங்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்றார். இந்த பிரச்சாரத்தின் போது நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், சிவகாமி பரமசிவம்,ஈஸ்வரன், மகேஸ்வரன்,ரமேஷ், தினேஷ் குமார் பூங்குழலி ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News