ஆதீன மறைவிற்கு வானதி சீனிவாசன் இரங்கல் !

காமாட்சிபுர ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்திய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.;

Update: 2024-03-12 12:20 GMT
ஆதீன மறைவிற்கு வானதி சீனிவாசன் இரங்கல் !

வானதி சீனிவாசன் இரங்கல்

  • whatsapp icon
கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சக்தி பீட ஆதினமாக இருந்து வந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தரார். இதனையடுத்து அவரது உடல் ஆதீன பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் சுவாமிகளின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் ஆன்மீக வளர்ச்சிக்காவும் சமுதாய பணிகளுக்காக பாடுபட்டு மக்கள் மத்தியில் அன்போடு மதிக்க பெற்றவர் உயிரோடு இல்லை என்பது நினைத்து பார்க்க முடியவில்லை என்றார்.இந்து இயக்கங்களுக்கு சக்தியாக விளங்கியவர் அவர் இந்துக்களுக்கு எந்த ஒரு இடத்தில் பிரச்சனை என்றாலும் முதல் குரலாக அவரது குரல் ஒலிக்கும் என்றார்.பாஜக தேர்தல் நிற்கும்பொழுது எல்லாம் உறுதுணையாகவும் உந்து சக்தியாக விளங்கியவர் அவரது மறைவு தங்களுக்கு தாங்க முடியாத வேதனையை அளிப்பதாக தெதிவித்த அவர் பாஜக மற்றும் இந்துக்கள் சார்பில் அவரது மறைவால் வாடும் பக்தர்கள்,அங்காள பரமேசுவரி பீடத்தை சார்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவருடைய பரிபூரண ஆசி நம்மிடம் தான் இருக்கிறது என்கிற எண்ணத்தோடு அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றார்.
Tags:    

Similar News