வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.

Update: 2024-06-18 05:02 GMT

மதுரை-பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.


மத்திய அரசின் ரெயில்வே துறை சார்பில் மதுரையில் இருந்து திருச்சி, சேலம் மார்க்கமாக பெங்களூரு வரை வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக சேலம் ரெயில் நிலையத்தை காலை 9.55 மணிக்கு வந்தடையும்.

பின்னர் 5 நிமிடங்கள் மட்டும் நிற்கும் இந்த ரெயில் காலை 10 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் அதே வழித்தடத்தில் பெங்களூரு-மதுரை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் வழியில் திருச்சி, சேலம் ஆகிய 2 இடங்களில் மட்டும் நின்று செல்லும். அதேபோல், திரும்பி வரும்போது இந்த 2 இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதையொட்டி நேற்று காலை அந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. அதன்படி, மதுரையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்ட இந்த வந்தே பாரத் ரெயில் திண்டுக்கல் வழியாக திருச்சியை காலை 7 மணிக்கு சென்றடைந்தது. அதன்பிறகு அங்கிருந்து கரூர் வழியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு காலை 9.18 மணிக்கு வந்தடைந்தது. அதாவது, காலை 9.55 மணிக்கு வந்தே பாரத் ரெயில் வந்தடையும் என திட்டமிட்டிருந்த நிலையில் சுமார் அரைமணி நேரம் முன்னதாகவே வந்தடைந்தது. அப்போது, அந்த ரெயிலை பார்த்து பயணிகளும், ரெயில்வே அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்து ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News