வாணியம்பாடி : பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-21 14:22 GMT
பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சமையல்காரர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கபூராபாத் பகுதியை சேர்ந்தவர் நயீம் (வயது 42) சமையல் செய்யும் தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், இவரது மனைவி மதினா மற்றும் பிள்ளைகள் வெளியூரில் உள்ளனர். இந்த நிலையில், நயீம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி கபூராபாத் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று நயீம் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நயீம் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், வீட்டிற்கு நுழைந்து பார்த்த போது நயீம் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நயீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.