கண்டெடுத்த உடல் குறித்து விஏஓ புகார்- காவல்துறை வழக்கு
கண்டெடுத்த உடல்- புகார்
By : King 24X7 News (B)
Update: 2023-11-11 03:45 GMT
கனகபுரியில் கண்டெடுக்கப்பட்ட உடல் குறித்து VAO அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகபுரி பகுதியில் உள்ள ஓடை அருகே அடையாளம் தெரியாத எரியூட்டப்பட்ட நிலையில் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நவம்பர் 9ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அரவக்குறிச்சி கொடையூர் கிராம நிர்வாக அலுவலர் பெல்சியா காயத்ரி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அடையாளம் தெரியாத உடலை கைப்பற்றி அடையாளம் காணுவதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்