70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

Update: 2024-05-28 14:42 GMT

வர்தராஜா பெருமாள்

பூந்தமல்லி அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 20 ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   இதையொட்டி சுவாமி சிம்மா வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தினமும் காலை மாலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரமோற்சவ விழாவையொட்டி திருமஞ்சனம் செய்து மோனா பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார் . இதனைத் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்கரத்தாழ்வார் கோயில் திருக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  

Tags:    

Similar News