தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம்!
தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம்!;
By : King 24x7 Website
Update: 2024-01-10 12:26 GMT
தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம்!
6- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்துகின்ற போராட்டத்தில் இன்று பேருந்துகளை மறிக்க முயன்ற 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது தமிழக அரசு பென்ஷன் ஏற்றி தருவார்கள் என தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை நம்பி ஓட்டு போட்ட எங்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என ஓய்வு பெற்ற முன்னாள் போக்குவரத்து ஊழியர் கதறல் தமிழக முழுவதும் இரண்டாவது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் அண்ணா தொழிற்சங்கம் ஏ ஐ டி யு சி மற்றும் போக்குவரத்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து மறிக்க முயன்ற போது காவல்துறைக்கும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த அரசு பேருந்து மறித்தனர் இதனை அடுத்து காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக போக்குவரத்து துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ராஜாராம் சிங் என்பவர் அளித்த பேட்டியில் நான் 18 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை பி ஆர் சி யில் வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தேன் எனக்கு ஒன்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வருகிறது விடியா திமுக அரசு தேர்தலில் போட்டியிடும் பொழுது நாங்கள் வெற்றி பெற்றால் ஓய்வூதியம் ஏற்றி தருவோம் என கூறினார்கள். இதனை நம்பி பல லட்சம் ஊழியர்கள் அவருக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தோம். ஆனால் தற்பொழுது அவர்கள் ஓய்வுத்யத்தை ஏற்றி தர மறுக்கிறார்கள். எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என கூறினார் .ஆகவே அரசு இந்த போராட்டத்தின் ஒரு வாயிலாக எங்களது கோரிக்கையும் ஏற்க வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டார்.