தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை

முருகன் கோவிலில் வருண கலச பூஜை

Update: 2024-06-15 05:56 GMT

கலச பூஜை

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்க ளுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ககலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம் பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.
Tags:    

Similar News