கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் வருஷாபிஷேகம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் வருஷாபிஷேகம் 2 நாட்கள் நடந்தது

Update: 2024-02-08 06:19 GMT

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் வருஷாபிஷேகம் 2 நாட்கள் நடந்தது

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனையும் வருஷாபிஷேகமும், பஜனை பட்டாபிஷேகமும், 2008 திருவிளக்கு பூஜையும் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் காலையில் திருப்பள்ளிஎழுப்புதல், கணபதி ஹோமம், ஆலய தந்திரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனை, நிவேத்தியம் நடைபெற்றன.      

மாலையில் லட்சார்ச்சனை குங்குமஅபிஷேகமும், இரண்டாம் நாள் காலையில் அபிஷேகம் கலச பூஜை தொடர்ந்து பொங்கல் வழிபாடு , வருஷாபிஷேகம், இசக்கியம்மன் கோயிலுக்கு கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றன.   பிற்பகல் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பஜனை குழுவில் பஜனை நிகழ்ச்சியும், மாலையில் கண்ணன் விளையாட்டும், சிறப்பு பூஜையும் இரவு 2008 திருவிளக்கு பூஜை யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி தலைமையில் நடந்தது. 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் குமார், செயலாளர் துளசிதாஸ், பொருளாளர் சௌந்தரராஜன் துணைத் தலைவர் முருகன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News