கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

Update: 2024-03-14 04:38 GMT
 ஊட்டச்சத்து உணவு வழங்கல் 
தென்காசி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி  சார்பில் தென்காசி அருகில் உள்ள வீராணம் கிளை சார்பாக வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பண், பழங்கள், மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வீராணம் கிளை தலைவர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவர் மணிமாலா கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் கிளை செயலாளர் முகம்மது காசிம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News