வாழப்பாடியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

வாழப்பாடியில் நடக்கும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-25 14:50 GMT

 எஸ்.ஆர்.சிவலிங்கம்

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு வாழப்பாடியில் உள்ள மு.க.ஸ்டாலின் அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மார்ச் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் குறித்தும், நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் மாநில துணை அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tags:    

Similar News