வண்ணபுகைகுண்டு வீச்சு - விசிகவினர் சாலை மறியல்
இந்திய நாடாளுமன்றத்திற்குள் கலர் குண்டு வீச்சு மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும், விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்
Update: 2023-12-22 10:48 GMT
ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இந்திய நாடாளுமன்றத்திற்குள் கலர் குண்டு வீச்சு மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய தேச விரோதிகள் குறித்தும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும், தேச விரோதிகளுக்கு அனுமதி பெற்றுத்தந்த பாஜக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உள்பட எதிர்கட்சிகளை சேர்ந்த141 பாராளுமன்ற உறுப்பினர் களையும் மழைக்கால கூட்டத் தொடர்ந்து முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இராமநாதபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அற்புதக்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் விடுதலைசேகரன், பாராளுமன்ற தொகுதிச் செயலாளர் கோவிந்தராசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்யராசுவளவன் மற்றும் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.