திருப்பத்தூர்: விசிக போராட்டம்
திருப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒப்புக் சீட்டை பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் ஸ்டேட் பாங்க் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒப்புக் சீட்டை பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பத்தூர் ஸ்டேட் பேங்க் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் ஓம்பிரகாசம் தலைமையில் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது நாடு முழுவதும் நம்பகத் தன்மையற்ற சூழல் நிலவுவதால் 2024 தேர்தலில் 100% ஒப்புக் சீட்டை பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனக் கூறி திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டதில் சுபாஷ் சந்திர போஸ் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தோழமை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.