விசிக தெற்கு மாவட்ட அலுவலகம் திறந்துவைத்தார் தொல்.திருமாவளவன்

திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட அலுவலகம் தொல்.திருமாவளவன் திறந்துவைத்தார்;

Update: 2023-12-01 08:29 GMT

விசிக கட்சி அலுவலத்தை திறந்து வைத்தார் திருமாவளவன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை காந்திநகர் 3வது தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மண்டல செயலாளர் பு.செல்வம் தலைமை தாங்கினார். மேலிடப்பொறுப்பாளர்கள் கி.கோவேந்தன் ச.அசோகன் ஆகியோர் முன்னிலை வகிக்க தெற்கு மாவட்ட செயலாளர் ச.நியூட்டன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் புதிய தெற்கு மாவட்ட அலுவலகத்தை ரிப்பன்வெட்டி திறந்துவைத்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் மாநில துணை செயலாளர் பேராயர் சாம்.பன்னீர்செல்வம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பு கிறிஸ்துவ சமூக நீதி பேரவை பொருளாளர் வி.பன்னீர், எல்சடாய் ஐக்கியத்தின் தலைவர் ரவர்டேனியல்குமார், நகர செயலாளர் சகாயராஜ், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வேலு ஜெரோபியா டேனியல் ஆனந்தன் மற்றும் பேராயர்கள் தொல்.திருமாவளவனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.க.அம்பேத்வளவன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News