விசிக வேப்பூர் ஒருங்கிணைந்த ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் ஒருங்கிணைந்த ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயற்குழு கூட்டம் குன்னத்தில் நடைபெற்றது

Update: 2024-03-01 09:54 GMT
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் ஒருங்கிணைந்த ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயற்குழு கூட்டம் குன்னத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியாதிருமண மஹாலில், பிப்ரவரி-29 பாகல் 12 மணி பெரம்பலூர் மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் ஒருங்கிணைந்த ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயற்குழு கூட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தன் அனைவரையும் வரவேற்றார்.. வேப்பூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் சேகர், பரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முதன்மை செயலாளர் பாவரசு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மேலிடப்பொருப்பாளர். இரா.கிட்டு, விடுதலைச் செழியன், ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்துகொண்டு தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணிகள் குறித்து விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தனர்.: மேலும்எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் வரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது, உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள் இக்கூட்டத்தில்அரியலூர்- பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன், மாநில செயலாளர் வீர.செங்கோலன் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணக்குமார் , மாவட்ட செய்தித் தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணை செயலாளர்கள் வழக்கறிஞர் ஸ்டாலின், மாறன் மாநில துணை செயலாளர்கள் முனைவர் தமிழ்க்குமரன் வழக்கறிஞர் அண்ணாதுரை ஆசிரியர் பிரேம்குமார் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ..
Tags:    

Similar News