வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சேலம் மாவட்டம்,பழையூர் பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-11 12:10 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிபட்டி பழையூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வாக கிராம சாந்தி, மருந்து சாத்துதல், காவேரி ஆற்றில் திரளான மக்கள் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வருதல், பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்,பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, பாலிகை பூஜை,கங்கணம் கட்டுதல், முதற் கால இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

இதனையடுத்து யாக சாலை பூஜைகள் சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தம் எடுத்தவாறு பம்பை மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்து விநாயகர், வீரமாத்தியம்மன்,கருப்பராயன் ஆலய கோபுரத்தில் புனித தீர்த்தம் ஊற்றினர், அப்போது கோவிலை சுற்றி இருந்த திரளான மக்கள் பக்தி கரகோஷம் எழுப்பி வழிபட்டனர்.

பின்னர் அனைவருக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது, இதனையடுத்து வீரமாத்தியம்மன் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் காவேரிபட்டி பழையூர் சுற்றுவட்டாரப் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News