மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி போட்டி
மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக முழுவதும் போட்டியிட போவதாக மாநில ஒருங்கிணண்பபாளர் பேட்டி.
Update: 2024-03-12 19:19 GMT
மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனரும்’ தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்,கே செல்வம் கலந்து கொண்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குமரனை நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்கே செல்வம் கூறியபோது :- கடந்த சட்டமன்ற தேர்தலில் உரலும் குலவி சின்னத்தில் போட்டியிட்டதாகவும் , தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதே சின்னம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திராவிட மற்றும் தேசிய கட்சிகள் தங்களை முற்றிலுமாக மறுத்ததாகவும் , மத்திய வேலைவாய்ப்பில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும் கூறினார். மேலும் எங்களது வேட்பாளர் வெற்றி பெற்றால் ஓபிசியில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கிட வேண்டுமென பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார் என தெரிவித்தார். மேலும் மேகதாது அணை கட்டுவதை முற்றிலுமாக தடுத்து தமிழகத்துக்கு உரிய நீரை எங்களது வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு பெற்று தருவார் என கூறினார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.