ராசிபுரத்தில் வாகன தணிக்கை - அபராதம் விதிப்பு

ராசிபுரம் பகுதியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடந்த வாகன தணிக்கையில் விதிமுறை மீறியவா்களுக்கு அபராதம் விதிப்பு

Update: 2024-02-01 03:01 GMT
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் இயக்கும் முறை குறித்தும் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து ராசிபுரம் மோட்டார் வாகனம் ஆய்வாளர் நித்யா ஓட்டுனர்களிடையே உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன தண்ணிக்கு ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி இளைஞர்கள், சிறார்கள்,பெண்கள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தும், அபராதம் விதித்தும் உறுதிமொழி ஏற்றனர். இளைஞர் ஒருவர் வாகன உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவந்த நிலையில் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்தார். வாகனத்திற்கு பர்மிட் மற்றும் வாகன புதுப்பித்தல் எதுவும் இல்லாததால் சம்பவ இடத்திலிருந்து வாகனத்தை பறிமுதல் செய்து 24,500 ரூபாய் அபராதம் விதித்தார். தற்போது நடைபெற்ற வாகன தணிக்கையில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்ற 9 வாகனங்களுக்கு 1000 விதம், ரூ.9000, அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனத்திற்கு ரூ.38000, பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான் பயன்படுத்திய 2 பேருந்துகளுக்கு ரூ.20000,இரு சக்கர வாகனங்களில் தொலைபேசி பேசிக்கொண்டு வந்த 2 நபர்களுக்கு 500 விகிதம்,ரூ.1000 அபராதம் விதித்த நிலையில் மொத்தம் ரூ.96,500 அபராதம் விதித்து குறிப்பிடத்தக்கது. மேலும் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு இடங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் தொடர்ந்து வாகன தணிக்கை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும், பொதுமக்களிடத்தில் வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள், என அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
Tags:    

Similar News