கனகம்மாசத்திரத்தில் பாழாகும் வாகனங்கள்

கனகம்மாசத்திரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பரிதாபதத்திற்குரிய நிலையில் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Update: 2024-05-20 13:44 GMT

வீணாகும் வாகனங்கள்

பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, குற்றத்துக்கு அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. விபத்து மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் போன்றவையும் கைப்பற்றப்படுகின்றன. இவ்வாறு பிடிபடும் இருசக்கரவாகனங்கள், கனகம்மாசத்திரம் காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள காவலர் குடியிருப்பு மற்றும் அதன் வளாகத்தின் வெளியே, பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

அவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மட்கி வீணாகின்றன. பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது. துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை ஏலம் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News