வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் கோயில் தேர் திருவிழா

வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில், இன்று திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2024-05-13 11:03 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் திருக்கோயில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் திருத்தேர் உருவாக்குவதற்காக, மோகனூர் நவலடியான் கோயிலில் இருந்து வேல் எடுத்து வந்து தேர் உருவாக்கியதாக வரலாறு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் அன்று இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் வயல்களில் விளைந்து, அறுவடை செய்த விவசாய விளைபொருட்களைக் கொண்டு வந்து கோயிலில் வைத்து, விளக்கேற்றி, சாமிக்கு படைத்த பின்பு, விபூதி பிரசாதம் பெற்றுச் சென்றுதான் கிராமங்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு பகவயதிம்மன் கோயில் தேர்த்தருவிழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று (மே12ம்) திரளான பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தெரடர்ந்து வடிசோறு வைத்து சுவாமிக்கு படைத்தனர். இன்று திங்கட்கிழமை (மே 13) தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுவாமி உற்சவர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை செவ்வாய்க்கிழமை (மே 14) பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தல், தெடர்ந்து கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீர் விழா நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News