வேலூர் : 2800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு

பேர்ணாம்பட்டு அருகே சாத்கர் மலைப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 2800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

Update: 2024-02-25 14:03 GMT

கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்சுபவர் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான மாவட்ட தனிப்படை போலீசார், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து பேர்ணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்கர் மலைப்பகுதியில் கடம்ப கன்னூர் மற்றும் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் கூனாம்பட்டி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட சோதனையில் கள்ளச்சாராய ஊரல்கள் சுமார் 2800 லிட்டர் அழிக்கப்பட்டது. இது போன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News