வெங்களபிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் மன்னர் காலத்து பாரம்பரிய மிக்க வெங்களபிடாரி அம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தனர்.

Update: 2024-02-22 08:35 GMT

கும்பாபிஷேகம் 

புதுக்கோட்டை, ராஜகோபாலபுரத்தில் மன்னர் காலத்தில் இருந்து பாரம்பரியமிக்க வெங்கள பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மன்னர் காலத்து கோவில் என்பதால் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் இந்த கோவிலில் தினமும் சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வார்கள்.

இந்நிலையில், மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கள பிடாரி அம்மன் கோவிலின் 18 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்று காலயாக பூஜைகள் செய்யப்பட்டு இன்று முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நடைபெற்றது யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்களை வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து பின்னர் கோவிலின் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக புதுக்கோட்டை நகர பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்திலிருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்டோர் கோவிலை சுற்றி நின்று கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி பூரண ஜெயானந்த் மற்றும் மன்னர் கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News