கண்காட்சிக்கு இடம் - வேளாண் அதிகாரி ஆய்வு

உலகங்காத்தான் கிராமத்தில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துவதற்கான இடத்தை வேளாண் இயக்குனர் முருகேஷ், கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தனர்.

Update: 2024-02-19 04:16 GMT

அதிகாரிகள் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 29 மற்றும் மார்ச் 1 ஆகிய இரண்டு நாட்கள் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. 14 மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெறும் கண்காட்சியில், 130 தனியார் நிறுவனம் சார்ந்த அரங்கு, 70 அரசு துறை சார்ந்த அரங்கு என மொத்தமாக 200 அரங்குகள் அமைக்கப்படுகிறது.இதில், 2 வேளாண் துறை சார்ந்த அரங்குகளும், 1 அரங்கில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதையொட்டி, கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத் தானில் வேளாண் கண்காட்சி அரங்குகள் அமைக்க போதுமான இட வசதி உள்ளதா என்பது குறித்து வேளாண்மை இயக்குனர் முருகேஷ், கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, வேளாண்மை கூடுதல் இயக்குநர்கள் கருணாநிதி, முருகேசன், இணை இயக்குனர் அசோக்குமார், துணை இயக்குனர்கள் சங்கர சுப்ரமணியன், சுந்தரம், விஜயராகவன், உதவி இயக்குனர்கள் அன்பழகன், மோகன் மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News