நெப்பியபட்டியில் கால்நடை மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், நெப்பியபட்டியில் கால்நடை மருத்துவ முகாமில் விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெப்பியபட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் அருட் சிறுமலர் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கலியமுத்து உதவி இயக்குனர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை புதுகை மண்டல இணை இயக்குனர் ராமச்சந்திரன் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பேசினர். மாடுகளுக்கு மலடு நீங்க சிகிச்சை, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் 200 ஆடுகளுக்கு ஆட்கொல்லி தடுப்பூசி 300 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வடவாளம் கால்நடை டாக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் டாக்டர்கள் விக்னேஷ், ரவிச்சந்திரன், பிரபு கால்நடை ஆய்வாளர் முருகேஷ், பராமரிப்பு உதவியாளர் கோவிந்தன், முத்துப்பாண்டி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகளுக்கு பரசு வழங்கப்பட்டது.