கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

சிறந்த கால்நடை வளர்ப்புக்கு பரிசு வழங்கப்பட்டது

Update: 2023-12-10 12:45 GMT

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் அருகே சார்வாய் ஊராட்சியில் கால்நடைத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கால்நடை உதவி இயக்குனர் முருகவேல்தொடங்கி வைத்தார். சார்வாய் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். முகாமில் சார்வாய் ஊராட்சியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினைஊசி, சினை பரிசோதனை, கோமாரி நோய் தடுப்பூசி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை நடந்தன. கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும். அதிக பால் உற்பத்திக்கு தீவனப்புல்வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டன. மேலும்சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சக்திவேல் முரளி, கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News