பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலைகள் தயார்

திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்க வேட்டி சேலைகள் தயார் நிலையில் உள்ளது.

Update: 2023-12-14 16:13 GMT
வேட்டி சேலை சரிபார்க்கும் அதிகாரி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்க வேட்டி&சேலைகள் தயார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மாவட்டந்தோறும் எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்டிகள், சேலைகள் பல்வேறு கட்டங்களாக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வரும் திருப்பூர் மாவட்டத்திற்கும் வேட்டி, சேலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே வர தொடங்கியுள்ளன. இவை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தேவையான வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் ஆய்வு செய்தார். வருவாய் ஆய்வாளர் தேவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இது குறித்து வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் கூறியதாவது:& திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 506 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 534 பேர் சேலை பெறவும், 1 லட்சத்து 8 ஆயிரத்து 65 பேர் வேட்டி பெறவும் தகுதியுடையவர்கள்.

இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் வேட்டியும், 98 ஆயிரம் சேலைகளும் வந்துள்ளன. இவை பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் வந்ததும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அரசு அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News

Test