திடீரென மயங்கி விழுந்த நபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம்,காலாப்பட்டியில் மயங்கி விழுந்த நபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-18 08:37 GMT
பலி
அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டி சத்திரத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் குமார் (45) கொத்தனாரான இவர் முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த சிராஜூதீன் என்பவரது வீட்டில் அவரது மனைவியுடன் நேற்று கட்டிட வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, குமார் திடிரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்