ஓமலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
ஓமலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 15:12 GMT
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்வலர்கள்
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 10கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.