எடப்பாடியில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
விஜய் புதிய கட்சி தொடங்கியதை வரவேற்று ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்
நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியதை வரவேற்று எடப்பாடி அடுத்த கல்லுகடை மற்றும் எடப்பாடி பேருந்து நிலையத்தில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதை வரவேற்ற விஜய் ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லு கடை பகுதி மற்றும் பேருந்து நிலையத்தில் விஜய் ரசிகர்கள் சார்பில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜய் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.