சிறுவாச்சூர் கோயிலில் விஜய் ரசிகர்கள் தங்கதேர் இழுத்து வழிபாடு

சிறுவாச்சூர் கோயிலில் விஜய் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

Update: 2024-06-22 15:37 GMT

தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்திய கட்சியினர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் மாவட்ட தலைவர் கருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

பொருளாளர் பிரபு துணைப் பொருளாளர் வஜ்ரான் இணைச் செயலாளர் சச்சின் வேலன், நகர தலைவர் படையப்பா நகர முக்கிய நிர்வாகிகள் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் நவீன் ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் வேப்பூர் ஒன்றிய செயலாளர் ரியாஸ்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News