விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி: நன்றி போஸ்டர்களால் பரபரப்பு

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றதாக நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-06-04 10:50 GMT

நன்றி போஸ்டர்க்களால் பரபரப்பு

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி அடைந்து வெற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் - தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக திருப்பரங்குன்றம் ஹார்விப்பட்டி முழுவதும் தேமுதிகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பாக விஜய பிரபாகரனும், காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும்,பாஜக சார்பாக ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர்.

Advertisement

ஒரு பக்கம் விஜயகாந்த் மகன் இன்னொரு பக்கம் நடிகை ராதிகா சரத்குமார் என்று போட்டியிட்டதால் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நடைபெற்று முடிந்திருந்தது.

ஜூன் நான்காம் தேதி வாக்கு  என்னும் பணியானது இன்று காலை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக குறிப்பாக விருதுநகர் நாடாளுமன்ற  தொகுதியில் சில நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் வகிப்பதும் பின்னர் சில நேரங்களில் விஜய பிரபாகரன் முன்னிலை வகிப்பதும் மாறி மாறி இழுபறி இருந்து வரும் நிலையில் ஹார்விபட்டியைச் சேர்ந்த தேமுதிக கட்சி நிர்வாகிகள் *விஜயபிரபாகரன் வெற்றி அடைந்ததாகவும் விஜய பிரபாகரனுக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தும் ஆரியபட்டி பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இன்னும் வெற்றியே முடிவு செய்யாத நிலையில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றதாக தேமுதிக நிர்வாகிகள் ஒட்டி உள்ள சுவரொட்டிகள் பொதுமக்களிடையே சலசலப்பையும் பிற அரசியல் கட்சிகளிடையே பெரும்  பேசும் பொருளாக மாறி உள்ளது.

Tags:    

Similar News