ராசிபுரத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் அஞ்சலி
விஜயகாந்த் மறைவையொட்டி ராசிபுரத்தில் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.;
Update: 2023-12-29 04:16 GMT
அஞ்சலி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ராசிபுரத்தில் உள்ள விஜயகாந்த் ரசிகர்மன்றத்தின் சார்பாக மேட்டு தெரு பகுதியில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மோகன் ,ராஜா, பாமக சங்கர், செந்தில்குமார், கார்த்திக், ரமேஷ், தனபால் ஆகியோர் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ரசிகர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.