விஜயகாந்த் உடல்நலம் பெற பூச்சட்டி எடுத்த கட்சியினர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி திருப்பூரில் கட்சியினர் பூச்சட்டி எடுத்தனர்.;

Update: 2023-12-08 12:11 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி திருப்பூரில் கட்சியினர் பூச்சட்டி எடுத்தனர்.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமாக வேண்டி தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு வழிபாடு நடத்திய தொண்டர்கள். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனம் உடைந்த தேமுதிக தொண்டர்கள் தமிழக முழுவதும் உள்ளபல்வேறு கோவில்களில் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வித விதமாக வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.  மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல் தலைமையில் வார்டு செயலாளர் கிட்டுசாமி தொண்டர்கள் புடை சூழ தீசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேற்றிக் கடனை அம்மனுக்கு சாத்தினார். நிகழ்ச்சியின் போது கழகத் துணைச் செயலாளர் கே எஸ் அக்பர் மாவட்ட ஒன்றிய பகுதி கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News