வரும் 19 ந் தேதி விஜய்யின் 'LEO' படத்திற்கு கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

Update: 2023-10-17 05:10 GMT

'LEO' 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வரும் 19 ந் தேதி விஜய்யின் வெளிவரவிருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள 'LEO' திரைப்படத்திற்கு 19.10.2023 முதல் 24.10.2023 வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) மட்டும் சிறப்புக்காட்சி திரையிடுதலுக்கு அனுமதி வழங்கி G.O.(Rt).845 உள் (சினிமா) துறை, நாள்: 10.10.2023-இன் படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'லியோ' திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக் காட்சியை 19.10.2023 முதல் 24.10.2023 வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்க காட்சி காலை 9.00 A.M-க்கும் இறுதிக்காட்சி 1.30 A.M மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும்.

தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி 14A படிவம் 'சி' உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும். இந்நேர்வில் பின்வரும் நிபந்தனைகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது :

1. திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2.திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல்; வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

3.மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

4.திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

5.அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள் (Ticket fee) / வாகன நிறுத்தக்கட்டணம் (Parking fee) வசூலிக்கக்கூடாது.

திரையரங்குகள் மேற்படி விதிமுறைகளை மீறினால் தொலைபேசி எண் 04286 299137 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News