சுனாமி நினைவு ஸ்தூபியில் விஜய்வசந்த் எம்.பி மரியாதை
சுனாமி நினைவு ஸ்தூபியில் விஜய்வசந்த் எம்.பி மரியாதை செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 16:34 GMT
குமரி மாவட்டத்தில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 19-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், நாகர்கோவில் ஆர். டி.ஓ சேதுராமலிங்கம், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் ஸ்டிபன், காங்கிரஸ் வட்டார தலைவர் சாம் சுரேஷ் குமார் மற்றும் தாமஸ், செந்தில் உள்பட பேரூராட்சி கவுன்சிலர்களும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.