விக்கிரவாண்டி அகத்தீஸ்வரன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கவிழா

விக்கிரவாண்டி அகத்தீஸ்வரன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது.

Update: 2024-04-27 09:15 GMT

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின் ரோட்டில் தர்மசதவர்த்தினி உடனுறை அகத்தீஸ்வரன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதற்கான பாலாய வேள்வி நேற்று நடைபெற் றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை கண பதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜை நேற்று காலை 10 மணியளவில் முடிவ டைந்தது.

பின்னர் கும்பம் புறப்பாடு தொடங்கி சாமிகள் மீது பாலஸ் தாபன புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விக்கிரவாண்டி ரவி குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இதில் கோவில் அறங்காவலர் ரங்கநாதன் தலைமையில் திருப்பணி குழுவினர், இந்து அற நிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News