விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம் !
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
Update: 2024-03-11 10:27 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவி துரை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் டேவிட் வரவேற்றார். கணக்காளர் தணிகைவேல் தீர்மானங்களை படித்தார். கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடை பெறுகின்ற அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகளான குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மேலாளர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், சத்யா, பாரதி, ராஜேஸ்வரி, முனுசாமி, சாவித்திரி, ரவிச்சந்திரன், ஏகாம்பரம், செல்வம், நளினி, ராஜாம்பாள், அன்பரசி, செந்தில்குமார், மகேஸ்வரி, இளவரசி, சாந்தி, செண்பக செல்வி, கஸ்தூரி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் காமராஜ் நன்றி கூறினார்.