விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பாஜ வேட்பாளராக நந்தினி அறிவிப்பு

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பாஜ வேட்பாளராக நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-23 06:16 GMT

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பாஜ வேட்பாளராக நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அருமனை அருகே மாத்தூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி.இவர் பி.பி.ஏ. பட்ட தாரி. அவருக்கு வயது 42. இவருடைய கணவர் சுரேஷ்குமார், எலக்ட்ரீசியன் மற்றும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் நிரஞ்சன் என்ற மகன் உள்ளார்.நந்தினி 2013-ம் ஆண்டு முதல் பா.ஜனதா கட்சியில் உள்ளார். மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், 2020-ம் ஆண்டு முதல் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் தான் அவர் பா. ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கனிமவளம் கடத்தலை தடுப்பேன், மீனவர்களின் நலனுக்காக ஹெலிபேடு தளம் அமைக்க பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.
Tags:    

Similar News