கிராம நிர்வாக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
கிராம நிர்வாக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.;
By : King 24x7 Website
Update: 2023-12-07 17:02 GMT
கிராம நிர்வாக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
தர்மபுரி மாவட்டம், 07/12/2023 கிராம நிர்வாக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம். தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி, அரூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட 54 கிராம நிர்வாக உதவியாளர்கள், வட்டார தலைவர் கலாநிதி தலைமையில் காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1999ம் ஆண்டு வழங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை கடந்த 08.03.2023 அன்று நிறுத்தப்பட்டது. அதனை திரும்ப வழங்க வேண்டியும், அரசு ஊழியர் பட்டியலில் D பிரிவை இணைக்க வேண்டியும், கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை அரூர் வட்டாட்சியர் அலுவலக, வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் செயலாளர் ராஜலிங்கம் பொருளாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்